சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை 7 மணிக்கு தொடக்கம் ஐந்து மணி நேரம் சேவைகளில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிறுத்தப்பட்ட ரூ .7,500 கோவிட் கொடுப்பனவை மீள வழங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.
கோவிட் சிகிச்சை மருத்துவமனைகள், லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை மற்றும் மஹரகமவில் உள்ள அபேக்ஷா மருத்துவமனை ஆகியவற்றில் வேலைநிறுத்தம் செய்யப்படவில்லையென அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
இன்று மதியம் முதல் 12.30 மணி வரை அனைத்து மருத்துவமனைகளின் எதிரிலும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.




