அண்மையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சண்டிலிப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் மாணிக்கம் ஜெயக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, அவர் இதனை தெரிவித்தார்.
மாணிக்கம் ஜெயக்குமார் என்ற முன்னாள் போராளி, யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர். சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தரான இவர், வீட்டிலிருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஆதவன் என்ற இயக்கப் பெயர் உடைய இவர், கராத்தே கற்று, தினமும் உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் மேற்கொண்டு ஆரோக்கியமாக உள்ள அவர், சிறிய நீர் உள்ள கிணற்றில் சடலமாக காணப்பட்டார்.
அவரது உடலில் இரத்த காயங்கள் உள்ளதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணத்தில் உறவினர்களிற்கு சந்தேகம் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதுதவிர, திருகோணமலையில் முன்னாள் போராளியொருவரும், இன்னொரு இளைஞனும் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக சி.சிறிதரன் தெரிவித்தார்.