24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

பாராளுமன்றத்திலும் தமிழ் எம்.பிக்களிற்கு சிறப்புரிமை இல்லையா?: கஜேந்திரன் எம்.பி!

பாராளுமன்றத்திலும் தமிழ் உறுப்பினர்களிற்கு சிறப்புரிமை இல்லையா என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கேள்வியெழுப்பினார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தியாகி திலீபனிற்கு அஞ்சலி செலுத்துவது தமிழர்களின் மரபாக மாறியுள்ளது. 15ஆம் திகதி முதல், கொரேனா காரணமாக நான் தனிநபராக அந்த அஞ்சலியை செய்தேன்.  இறந்தவர்களை நினைவு கூர அனைவருக்கும் அனுமதிக்கப்படும் என உலக நாடுகளிற்கு இந்த அரசு சொல்கிறது. அவர்கள் விடுதலைப் புலிகள் என்றாலும், விடுதலைப் புலிகளின் அடையாளங்கள் இல்லாமல் நினைவுரலாம் என்கிறார்கள்.

நான் நினைவேந்தல் நடத்திய போது, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் வந்து என்னை தடுத்தனர். நீதிமன்ற உத்தரவை கேட்டேன். அவர்களிடம் இல்லை. உத்தரவிற்காக அரை மணித்தியாலம் காத்திருந்தேன். நான் சட்டத்தின்படி,அஞ்சலி செலுத்த முற்பட்ட போது, பொலிசார் அநாகரிகமாக நடந்து, தீபத்தை காலால் மிதித்தனர்.

என்னை கட்டாயமாக இழுத்து சென்றனர்.

நினைவேந்தல் நடத்தியதற்காகத்தான் என்னை கைது செய்தனர். ஒரு மணித்தியாலத்தின் பின்னர் என்னிடம் வாக்குமூலம் பெற ஆரம்பித்த போது, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாக என் மீது சோடிக்கப்பட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த கைது எனது சிறப்புரிமையை மீறும் செயல் என சிறப்புரிமை பிரேரணை ஒன்றை பாராளுமன்ற செயலாளர் ஊடாக சமர்ப்பித்திருந்தேன். எனினும், அது மறுக்கப்பட்டது. இந்த நாட்டில் தமிழ் மக்களும், பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களும் புறக்கணிக்கப்படுகிறார்களா? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றால் அவர்களிற்கு சிறப்புரிமையும் இல்லையா?

கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களிற்கான நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது. ஆனால் வவுனியாவின் சில சிங்கள பகுதிகளில் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இது இனவாத செயல் என அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, வவுனியா மாவட்ட எம்.பி கு.திலீபன் எழுந்து குழப்ப முற்பட, கடும் தொனியில் பேசி அவரை உட்கார வைத்தார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கம்மன்பிலவின் கவலைகளின் பின்னணி என்ன?

Pagetamil

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

Leave a Comment