நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

Date:

தற்போதுள்ள கடவுச் சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் நாளொன்றுக்கு 4,000 கடவுச் சீட்டுகள் வெளியிடப்படும் வகையில் வேலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (03.02.2025) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை, கடவுச் சீட்டுப் பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக அமைச்சரவை நியமித்த புத்திஜீவிகள் குழுவின் பரிந்துரைப்படியே மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், ‘பி’ வகை கடவுச் சீட்டுகள் 1,100,000 ஐ சமகால விநியோகத்திற்காக வழங்குவதற்கான செயன்முறை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான மேலதிக பணியாளர்களை ஈடுபடுத்த அரசு சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ஆணைக்குழுவின் உடன்பாட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்துவதன் மூலமும் மற்றும் தற்போது அரச சேவையில் ஈடுபடுகின்ற ஊழியர்களை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சிடம் கேட்டறிந்து இணைப்புச் செய்வதன் மூலமும் ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்