உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

Date:

ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள லங்கா உப்பு நிறுவனம், நாளை (6) முதல் உப்பின் விலையை 60 ரூபா அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதன் படி, 400 கிராம் பொதியிடப்பட்ட உப்பு தூளின் விலை 100 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும், 1 கிலோ பொதியிடப்பட்ட உப்பு கட்டியின் விலை 120 ரூபாவிலிருந்து 180 ரூபாவாகவும் அதிகரிக்கவுள்ளது. இந்த தகவலை ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலக இன்று அறிவித்தார்.

உப்பு விலை அதிகரிப்பு தற்காலிக தீர்மானமாகக் கருதப்படுவதாக அவர் கூறியுள்ளார். மார்ச் மாதம் ஹம்பாந்தோட்டையில் உப்பள உற்பத்தி ஆரம்பமாகிய பிறகு, உப்பு விலை மீண்டும் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்ததன் காரணமாக உப்பின் விற்பனை விலை அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்