25.7 C
Jaffna
March 2, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

பிரான்ஸில் கத்தோலிக்க மதகுருக்களால் 200,000 இற்கும் அதிக குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம்: பேரதிர்ச்சி அறிக்கை!

பிரான்ஸில் கடந்த 70 ஆண்டுகளில் மதகுருமார்கள் 200,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக செவ்வாய்க்கிழமை வெளியாகிய ஒரு முக்கிய விசாரணை அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த கொடிய நிகழ்வுகள் தொடர்பாக கத்தோலிக்க திருச்சபை நீண்ட காலமாக  கண்மூடித்தனமாக இருந்ததாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஜீன் மார்க் சாவ் தலைமையிலான தனியார் விசாரணைக் குழு, செவ்வாய்க்கிழமை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில், உலகெங்கிலும் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருவதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது. பிரான்ஸில் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக, இந்தப் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருகின்றன.

பிரான்ஸில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த 3,000 பாதிரியார்களும், பிற ஊழியர்களும் இந்தப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளனர். 1950ஆம் ஆண்டு முதல் இதுவரை 2 இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் சிறுவர்கள் ஆவர். அவர்களின் வயது 10 -13க்குள் இருக்கும். ரோமன் கத்தோலிக்க தேவாலயம் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதைவிட தம்மைக் காக்கவே நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் பிரான்ஸ் தேவாலயங்களில் சுமார் 2,900 – 3,200 பீடோபில்கள் (குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள்) இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கை பிரான்ஸ் மக்களிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேவாலயங்கள் தங்களைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன.

பிரெஞ்சு ஆயர்கள் மாநாட்டின் தலைவர் எரிக் டி மவுலின்ஸ்-பியூஃபோர்ட், இந்த சம்பவங்களால் தேவாலயம் வெட்கப்படுவதாக கூறினார். அறிக்கையை “வெடிகுண்டு” என்று அழைத்த அவர், மன்னிப்பு கேட்டு செயல்படுவதாக உறுதியளித்தார்.

தேவாலயத்ங்களின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்காக 2018 ஆம் ஆண்டின் இறுதியில் பிரான்சில் கத்தோலிக்க ஆயர்களால் இந்த சுயாதீன விசாரணை குழுநிறுவப்பட்டது. இது தேவாலயத்திலிருந்து சுதந்திரமாக வேலை செய்தது.

2000 கள் வரை தேவாலயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான அலட்சியத்தைக் காட்டியது என்றும், 2015-2016 இல் அதன் அணுகுமுறையை மாற்றத் தொடங்கியது என்றும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன நடந்தது என்பதற்கு தேவாலயம் பொறுப்பேற்க வேண்டும்,. துஷ்பிரயோகம் குறித்த அறிக்கைகள் நீதித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்யப்பட வேண்டும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான நிதி இழப்பீடுகளையும் வழங்க வேண்டும். இது போதுமானதாக இல்லாவிட்டாலும் (பாலியல் துஷ்பிரயோகத்தின் அதிர்ச்சியை நிவர்த்தி செய்ய), இருப்பினும், அங்கீகார செயல்முறையை நிறைவு செய்வதால் அது இன்றியமையாதது.” என குறிப்பிட்டுள்ளது.

1950-1970,களில் துஷ்பிரயோக போக்கு அதிகமாக காணப்பட்டது. மீண்டும் 1990 களின் முற்பகுதியில் மீண்டும் எழுச்சி ஏற்பட்டது.

பரந்த அளவிலான ஆய்வில் 216,000 பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தேவாலயத்துடன் தொடர்புடைய பிறரின் துஷ்பிரயோகங்களையும் கணக்கிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 330,000 ஆக உயரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேவாலய துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவரும், பாதிக்கப்பட்டவர்களின் சங்கத்தின் நிறுவனருமான லா பரோல் லிபிரே பிராங்கோயிஸ் டெவாக்ஸ், இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து கருத்து வெளியிட்ட போது,

“தேவாலய பிரதிநிதிகள் எங்கள் மனிதகுலத்திற்கு அவமானமானவர்கள். இந்த நரகத்தில் அருவருப்பான வெகுஜனக் குற்றங்கள் நடந்துள்ளன … ஆனால் அதைவிட மோசமாக, நம்பிக்கை துரோகம், மன உறுதியைக் காட்டிக் கொடுப்பது, குழந்தைகளுக்குத் துரோகம் செய்திருக்கிறது.” என்றார்.

1970 மற்றும் 2015 க்கு இடையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 3,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட 900 க்கும் மேற்பட்ட புகார்களை கத்தோலிக்க தேவாலயம் பெற்றுள்ளதாக பிரிட்டன் கூறிய ஒரு வருடத்திற்கு பிறகு பிரான்ஸிலிருந்து இந்த அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அழைப்பு

Pagetamil

இனி அமெரிக்க இராணுவத்தில் மாற்றுப் பாலினருக்கு இடமில்லை

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!