தென்மராட்சி இளைஞனின் மரணத்திற்கான காரணம் வெளியானது!

Date:

யாழ், தென்மராட்சி விபத்தில் உயிரிழந்த இளைனின் மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனையில் வெளியாகியுள்ளது.

தென்மராட்சி, மீசாலை சந்திக்கு அண்மையாக இடம்பெற்ற விபத்தில் கொடிகாமத்தை சேர்ந்த ராஜன் சிந்துஜன் (24) என்பவர் உயிரிழந்தார். அவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது. கடந்த 14ஆம் திகதி விபத்து இடம்பெற்றது.

இளைஞனின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சாவகச்சேரி நீதிமன்றத்தின் உத்தரவிற்கடைய நேற்று முன்தினம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலிருந்து, யாழ் போதனா வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பப்பட்டது.

நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணையில்,  விபத்தினால் ஏற்பட்ட தாக்கத்தினாலேயே இதயம் வெடித்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவருடைய இறுதி நிகழ்வுகள் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தவெக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு

தவெக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்வு...

“நம்மைவிட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே தவெக கூடுதலாக பெற்றுள்ளது” – மு.க.ஸ்டாலின்

‘கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம்...

மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசிய அர்ச்சுனா!

கச்சைதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள் என நாடாளுமன்றத்தில் உளறிக்கொட்டியுள்ளார் அர்ச்சுனா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்