வவுனியாவில் காப்பகத்தில் உள்ளவர்கள் உட்பட 4 பேர் கோவிட் தொற்றால் மரணம்

Date:

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக இன்று (15) 04 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த , தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 04 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

நெளுக்குளம் , கோவிற்குளம் , பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள காப்பகம் இருவர் என அந்த பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு கோவிட் தொற்றால் மரணித்தவர்களாவார்கள்

இந்நிலையில் மரணித்த 4 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​தவர் பல்​லவி சிங் ராஜ்புத். இவர்...

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலிப் நாணயத்தாள்களை வைத்திருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்