யாழ்ப்பாணம், கொட்டடி, வில்லூன்றிப் பிள்ளையார் கோயிலில் வழிபட்டுக் கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.
இராஜேந்திரா சந்திரவதனா (68) எனும் மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
பிள்ளையார் சதுர்த்தியிலன்று வில்லூன்றி பிள்ளையார் கோயிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போதே, மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1