அதிக லொக் டவுண் விதித்த நாடு… லொக் டவுண் விதிகளை மீறிய அதிக மக்களை கொண்ட நாடு- இரண்டும் இலங்கையே!

Date:

COVID-19 தொற்றுபரவலின் போது அதிக எண்ணிக்கையிலான முடக்கத்தை விதித்த நாடாகவும், முடக்க விதிமுறைகளை மீறிய அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட நாடாகவும் இலங்கை மாறியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் குறிப்பிடுவதாக சுகாதார தொழில் வல்லுனர்கள் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

முடக்கம் முறையான முறையில் இல்லாமல் நீண்ட காலத்திற்கு அமுர்ப்படுத்தப்பட்டதால்,
ஊரடங்கு பற்றிய கருத்து பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

முடக்க காலத்தில் பிசிஆர் மற்றும் பிற சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். எனினும், சுகாதார அமைச்சும், அதிகாரிகளும் அதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றார்.

நாட்டை முடக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்கள் இப்போது நாட்டை மீண்டும் திறக்கும்படி கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்கள். ஏனெனில் அது சரியாக அமல்படுத்தப்படவில்லை என்றார்.

ஒரு அறிவியல்ரீதியான முடக்கத்தை அமுல்ப்படுத்த வேண்டும். இது உண்மையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைய உதவும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்