கல்பிட்டி பகுதியில் கடத்தல்காரர்கள் 5 பேர் கைது

Date:

மன்னார், கற்பிட்டி – துடாவ மற்றும் அரிப்பு கடலோரப் பகுதிகளில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​1,628 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் ஒரு தொகை மின்சாதன பொருட்களை இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த 5 சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் (10) நள்ளிரவு மற்றும் நேற்று அதிகாலை (11) மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கையில், 2 டிங்கி படகுகளை கைப்பற்றியுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (10) இரவு கற்பிட்டி துடாவ கடற் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​துடாவ கரையை நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான படகை சோதனையிட்டபோது, 31 உரப்பைகளில் அடைக்கப்பட்ட 1,134 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் மேலும் 2 பொதிகளில் காணப்பட்ட வீட்டு மின்சாதனப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் இலத்திரனியல் பொருட்களும் காணப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து குறித்த பொருட்கள் மற்றும் 3 சந்தேகநபர்களுடன் குறித்த டிங்கி படகை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை,  நேற்று (11) காலை அரிப்பு முகத்துவாரம் பிரதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அரிப்பு பிரதேசத்தை நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகை சோதனையிட்டபோது, 17 உரப்பைகளில் அடைக்கப்பட்ட நிலையிலிருந்த 494.1 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளை கைப்பற்றியுள்ள கடற்படையினர், சந்தேகத்திற்கிடமான படகிலிருந்த 2 சந்தேகநபர்களுடன் டிங்கிப் படகையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் 26 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், கற்பிட்டி மற்றும் பேசாலை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கற்பிட்டி துடாவ பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், உலர்ந்த மஞ்சள், மின் உபகரணங்கள், டிங்கி படகுகள் ஆகியவற்றுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரிப்பு முகத்துவார பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், யாழ் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட முன்னர், தனிமைப்படுத்தலுக்காக பொதுச் சுகாதார பரிசோதகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதோடு, உலர் மஞ்சள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்டநடவடிக்கைக்காக யாழ். சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்