அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார் இங்கிலாந்தின் 18 வயது எம்மா ராடுகானு

Date:

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளார். கடந்த 44 வருடத்தில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதலாவது இங்கிலாந்து வீராங்கணையும் அவரே.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டிகள் நடந்தன. இதில், 18 வயதான இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு மற்றும் 19 வயதான கனடா நாட்டின் லெய்லா பெர்னாண்டஸ் மோதினர்.

1999 இற்கு பின்னர் அமெரிக்க ஓபன் இறுதியில் இளவயது வீராங்கணைகள் மோதிய முதல் சந்தர்ப்பம் இது.

இந்த போட்டியில், 6-4, 6-3 என்ற செட் கணக்கில் லேலாவை வீழ்த்தி ராடுகானு வெற்றி பெற்றுள்ளார். இந்த போட்டி ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் வரை நீடித்தது.

2004இல் மரியா சரபோவா 17 வயதில் விம்பிள்டன் பட்டம் பெற்றதன் பின்னர், இளவயதில் எம்மா ராடுகானுவே கிராண்ட்ஸ்லாம்  பட்டம் வென்றுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்