வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் மாயம்!

Date:

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியில் எல்லை தாண்டிய இந்திய மீனவ படகு மோதியதில் படகு சேதமடைந்த நிலையில் இருவர் கரை சேர்ந்ததுள்ளனர். மற்றுமொரு படகும் இரு மீனவர்களை காணவில்லை என சமாசத் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

நேற்று கடலிற்கு தொழிலிற்க்காக சென்ற படகை எல்லை தாண்டிய இந்திய மீன்பிடி படகு மோதியதில் ஒரு படகு பலத்த சேதமாகியுள்ளதாகவும் சேதமான ஒருபடகில் சென்ற இருவரும், சேதமடைந்த படகுடன் கரை திரும்பியதாகவும் குறிப்பிட்டார்.

மேலுமொரு படகு கடலில் மீன்பிடித்்தொழிலுக்கு்சென்ற நிலையில் அதில் சென்ற இரண்டு பேரையும் காணவில்லை என்றும் தேடும் பணிகள் இடம் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கின்றன.

ராகவன் மற்றும் வளயா எனும் இருவருமே இதுவரை கரை திரும்பவில்லை என மீனவர் சங்க தகவல்கள் தெரிவிப்பதுடன் மீனவர்களால் தேடப்பட்டு இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது கடற்படை தேடிவருகின்றனர்.

காணாமல் போன மீனவர்களது வலைகள் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்