யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/26 கிராமசேவகர் பிரிவு, மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட J/432 மற்றும் J/433 ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளும் (வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, போக்கருப்பு, கேவில், நித்தியவெட்டை கிராமங்கள்) முடக்கப்பட்டுள்ளன என மாவட்டச் செயலாளர் கூறினார்.



