கையடக்க தொலைபேசி சார்ஜரை தொட்ட இரண்டு வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
பிரேசிலின் எரெர் நகராட்சி பகுதியில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தில், சாரா ஆல்வெஸ் டி அல்புகெர்க் என்ற 2 வயது சிறுமியே உயிரிழந்தார்.
சார்ஜரை தனது கைகளால் பிடித்த பின்னர் அவர் மின்சாரத் தாக்கத்திற்கு இலக்கானார்.
ஆபத்தான நிலையில் சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவரை காப்பாற்ற முடியவில்லை.
பிரேசிலில் கடந்த ஆண்டு மட்டும் மின்சார அதிர்ச்சியால் 355 இறப்புக்கள் பதிவாகின.
தொலைபேசியின் தயாரிப்பு நிறுவனம், அல்லது அது அங்கீகரிக்கப்பட்ட பிராண்டின் சார்ஜரா என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.



