கிளிநொச்சியில் திடீர் சுழல் காற்று: 14 குடும்பங்கள் பாதிப்பு!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 14 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிற்பகல் 3 மணியளவில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடும் காற்றுடன் பலத்த மழை சில பகுதிகளில் பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளது.

குறித்த காலநிலை காரணமாக செல்வாநகர் பகுதியில் 09 குடும்பங்களை சேர்ந்த 25 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 07 வீடுகளின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மரம் முறிந்து விழுந்ததில் முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.

இதேவேளை கிருஷ்ணபுரம் பகுதியில் 05 குடும்பங்களை சேர்ந்த 17 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 வீடுகளின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கான இடர் கால உதவிகளை வழங்க மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவும், கரைச்சி பிரதேச செயலகமும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்