60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஐந்து நாட்களும் தடுப்பூசி: கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர்!

Date:

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வாரத்தின் ஐந்து நாட்களும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துப்படும் என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலாவது அல்லது இரண்டாவது தடுப்பூசியினை கிளிநொச்சி மாவட்டவைத்தியசாலையில் வார நாட்களில் காலை எட்டு மணி முதல் 12 வரை செலுத்திக்கொள்ள முடியும். அத்தோடு வரும் வாரமளவில் இத் தடுப்பூசி
செலுத்தும் நடவடிக்கை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்
செலுத்தப்படவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கிளிநொச்சி மற்றும் அயல் மாவட்டங்களைச் சேர்ந்த கொரோனா மரணங்கள் 25 இடம்பெற்றுள்ளன. இதில் 14 பேர் எவ்வித தடுப்பூசியினையும் செலுத்திக்கொள்ளாதவர்கள். ஏழு பேர் ஒரு தடுப்பூசியினை மாத்திரம் செலுத்திக்கொண்டவர்கள் எனவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்