எனக்கும் குடும்ப கஷ்டம்; அரைவாசி சம்பளத்தை வழங்க முடியாது: டிலான் பெரேரா எம்.பி!

Date:

என்னால் கொவிட் நிதியத்துக்கு முழுச் சம்பளத்தையும் வழங்க முடியாது என  பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் நிதியத்திற்கு தன்னால் அரைவாசி சம்பளத்தையே வழங்க முடியும், முழு சம்பளத்தையும் அளித்தால் தன்னால் உயிர்வாழ முடியாது எனவும் கூறினார்.

தான் இப்பொழுது சட்டத்தரணியாக பணியாற்றாமல் விட்டதால் பொருளாதார சிரமங்கள் இருப்பதாக தெரவித்தார்.

அவர் தனது சேமிப்பு அனைத்தையும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்டதாகவும், அந்த நிறுவனம் வீழ்ச்சியடைந்ததால் பணம் அனைத்தும் வீணாகி, ஐந்து சதத்தை கூட பெற முடியவில்லை என்றார்.

தனது மனைவியின் சிறிய வேலையில் வாழ்வதாகவும், மனைவி தனது சம்பளத்தில் 50% ஒரு சமூகப் பொறுப்பாக நன்கொடையாக வழங்கினாலும், அரச ஊழியர்களை இதுபோன்ற தியாகங்களை செய்யும்படி கேட்க முடியாது என்று அவர் கூறினார்.

“எனக்கே இது சிரமமாக இருந்தால், அரச ஊழியர்களுக்கு எவ்வளவு கடினமாக இருக்கும்?” என கேள்வியெழுப்பியிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...

மதக் காரணங்களைக் குறிப்பிட்டு, பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதிலிருந்து விலக்கு கோரிய நபர்

அமெரிக்காவின கென்டக்கியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவை (AI)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்