காவல் துறைக்கு நன்றி கூறினார் நடிகர் ஆர்யா!

Date:

இலங்கையைச் சேர்ந்த பெண் விட்ஜா என்பவர் நடிகர் ஆர்யா 70லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக குடியரசு தலைவர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் புகார் ஒன்றை அளித்தார். சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் ஆர்யா போல் போலி வலைதளத்தை உருவாக்கி ஜேர்மனிய பெண்ணிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தவிவகாரத்தில் ஆர்யா தன் தரப்பு விளக்கத்தை நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்நிலையில் வலைத்தள ஐபி முகவரியை வைத்து ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கத்தில் பதுங்கி இருந்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ஆர்யா, “சென்னை காவல் ஆணையருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் மற்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்த சென்னை சைபர் கிரைம் பொலிசாருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் வெளிப்படுத்த முடியாத மன அதிர்ச்சியில் இருந்தேன். இந்த வழக்கு எனக்கு நீண்ட நாட்களாக மன அழுத்தத்தை ஏற்படுத்தி வந்தது. என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்