மாஸ்க் அணியாவிட்டால் நிர்வாணமாக உணர்கின்றேன் எனக் கூறிய நடிகை!

Date:

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்

கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்குப் பின் என்று பிரிக்கும் வகையில் மக்கள் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. இதனால் மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முகக்கவசம் தான் உயிர்கவசம் என்ற வகையில் அதைத் தங்களது உற்ற நண்பன் ஆக்கியுள்ளனர்.

தற்போது நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,, “நாங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போது, படப்பிடிப்புத் தளங்களில் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளன, ஆனால் நடிகர்களாகிய நாங்கள் முகக்கவசம் இல்லாமல் இருக்க வேண்டும். நான் எப்போதும் முகக்கவசம் அணிந்து பழகிவிட்டேன், திடீரென்று முகக்கவசம் இல்லாமல் இருப்பது ஆடை இல்லாமல் நிர்வாணமாக இருப்பதைப் போல உணர வைக்கிறது. அந்தளவிற்கு அது நம் வாழ்வின் அங்கம் ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்