25 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

வவுனியாவில் உலாவியவர்களிற்கு அன்டிஜன் சோதனை: 4 பேருக்கு தொற்று!

கோவிட் தொற்று காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடியவர்களுக்கு வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று (23.08) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் எதிர் வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் முடக்க நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி செயற்படுபவர்கள் மீது பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், வவுனியா நகப் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், வீதியில் நடமாடியவர்களை வழிமறித்து அன்டிஜன் பரிசோதனையும் முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, குருமன்காடு சந்தி, பசார் வீதி மற்றும் ஹொரவப்பொத்தானை வீதி என்பவற்றில் துவிச்சக்கர வண்டி, மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களில் நடமாடியவர்கள் வழிமறிக்கப்பட்டு 38 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதில் ஆச்சிபுரம், மடுகந்தை, தரணிக்குளம், மதவாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் சுகாதாரப் பிரிவினராலும், பொலிசாராலும் எச்சரிக்கப்பாட்டு வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment