ஹசரங்கவை தட்டித் தூக்கிய ஐபிஎல் அணி எது தெரியுமா?

Date:

ஐபிஎல் 14 ஆவது சீசன் ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்ற நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் உள்ளிட்ட சில வீரர்களுக்கு நோய் கண்டறியப்பட்டதால் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 29 போட்டிகள்தான் நடத்தப்பட்டது. 31 போட்டிகள் எஞ்சியிருந்தது.

மீதமுள்ள இந்த 31 போட்டிகளும் எப்போது நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது.

தொடர்ந்து, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கொல்கத்தா அணி வீரர் பேட் கம்மின்ஸ், பஞ்சாப் அணியின் ரிலே மெரிடித் மற்றும் ஜெய் ரிச்சர்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணியின் கேன் ரிச்சர்ட்சன் உறுப்பினர்கள் ஐபிஎல் 14 ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்தனர்.

அதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, பின் ஆலன், டேனியல் சாம்ஸ் ஆகிய நான்கு பேர் ஐபிஎல் 14 ஆவது சீசனின் எஞ்சிய லீக் போட்டிகளில் பங்கேற்கமாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது மாற்று வீரரை ஆர்சிபி அணி தேர்வு செய்துள்ளது.

ஆர்சிபி அணியில் ஆடம் ஜம்பாவுக்கு மாற்றாக இலங்கையைச் சேர்ந்த ஸ்பின்னர் வானிந்து ஹசரங்கா சேர்க்கப்படுவார் என சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அந்த தகவல் தற்போது, ​​அணி நிர்வாகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா, இலங்கை இடையே டி 20 தொடரில் ஹசரங்கா அபாரமாக பந்துவீசி 5.58 ஏகனாமியுடன் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியிருந்தார். இவர், ஐசிசி டி 20 பௌலர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்