26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
மருத்துவம்

நெஞ்சுச் சளி பிரச்சினையா? இதோ வீட்டு வைத்தியம்

நெஞ்சு சளி பிரச்சினையை குழந்தைகள் போன்று பெரியவர்களும் அதிகமாகவே எதிர்கொள்கிறார்கள். நெஞ்சு சளி பிரச்சினை என்பது திடீரென்று வரும் பிரச்சினை இல்லை. சளியின் தீவிரம் குறையாமல் தற்காலிகமாக நிவாரணம் மட்டும் கிடைத்தால் போதும் என்று மாத்திரைகள் எடுக்கும் போது சளி நெஞ்சு கூட்டுக்குள் கட்டிவிடும். இதை தான் மார்பு சளி என்று சொல்வார்கள். இந்த சளி பிரச்சினை இருக்கும் போது அடிக்கடி சளி பிடிக்கும்.

சளி அடர்த்தியாக இருந்து வெளியே வராமல் தடுக்கும். இந்த நெஞ்சு சளியை வெளியேற்ற முதலில் அடர்த்தியாக இருக்கும் சளியை கரைக்க வேண்டும். பிறகு சளியை வெளியேற்ற வேண்டும். அதற்கு பக்குவமாக பூண்டு பால் தயாரித்து குடிக்கலாம். அதன் செய்முறை குறித்து தெரிந்துகொள்வோம்.

பூண்டு பால் தயாரிக்கும் முறை

தேவை – (ஒரு டம்ளர் அளவுக்கு)

பூண்டு பல் – 5 அல்லது 7

பசும்பால் – 200 மில்லி

தண்ணீர்- அரை டம்ளர்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூனில் பாதி அளவு

மிளகுத்தூள் – கால் டீஸ்பூனில் பாதி அளவு

பனங்கற்கண்டு – இனிப்புக்கேற்ப

தயாரிக்கும் முறை

பசும்பாலில் தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்து சூடேற்றவும். அதில் பூண்டு பல்லை தோலுரித்து சேர்த்து வேகவிடவும். பூண்டு பற்கள் சில நிமிடங்களில் வெந்துவிடும். பிறகு அதை இறக்கி மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து இனிப்பு தேவையான அளவு பனங்கற்கண்டு கலக்கவும். பிறகு அதை நன்றாக கரண்டியால் மசித்து இளஞ்சூட்டில் குடிக்கவும்.

எப்படி, எப்போது, ​​யாருக்கு பலன் கிடைக்கும்

இந்த பூண்டு பாலை தினமும் இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் முன்பு குடிக்க வேண்டும். உணவுக்கும் பால் குடிப்பதற்கும் இடையே ஒரு மணி நேர இடைவெளி இருக்கட்டும். அதே போன்று பூண்டு பால் குடித்த பிறகு எதையும் சாப்பிட கூடாது. பூண்டு பால் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் அப்படி கொடுக்கும் போது பூண்டின் அளவை குறைக்க வேண்டும். தொடர்ந்து கொடுக்க கூடாது. பூண்டு தொடர்ந்து எடுக்கும் போது குழந்தைகளுக்கு ஒவ்வாமை பிரச்சினை உண்டாகலாம். அதே பொன்று மஞ்சள், மிளகுத்தூள் குறைத்து கொடுக்கலாம்.பனங்கற்கண்டு சற்று தூக்கலாக கொடுத்தால் பலன் கிடைக்கும். தொடர்ந்து 21 நாட்கள் வரை இதை குடிக்க வேண்டும். இதுவே நெஞ்சு சளியை அகற்றி சளியை முழுவதுமாக வெளியேற்றும். சளி மலம் வழியாக கரைந்து வெளியேற முடியும்.

பூண்டின் நன்மைகள்

பூண்டில் அல்லிசின் சல்ஃபர், ஜிங் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இது ஆண்டி பயாடிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்தி ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளித்தருகிறது. இந்த பூண்டில் இருக்கும் நோய்த்தொற்றுகளை எதிர்க்கும் பண்புகள் உடலில் ஏற்படும் இருமல் மற்றும் சளி போன்ற சாதாரண நோய்களை வேகமாக குணப்படுத்தும் தன்மை பூண்டில் உண்டு. பூண்டில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டு இந்த இருமல், சளி பிரச்சினைகளை எளிதில் போக்கலாம்.

பூண்டில் இருக்கும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் இயற்கையில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள். இது உடலில் இருக்கும் விஷத்தன்மையை போக்கி ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இந்த ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் உடல் நோய்த்தொற்றுக்கு உள்ளாவதை டிஎன்ஏ பிறழ்வுகள் மற்றும் செல் செயல்பாடுகள் போன்றவற்றைத் தடுக்கிறது. பூண்டினை எடுத்துகொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு செல்களை அதிகரிக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்களும் கண்டறிந்துள்ளனர். நெஞ்சு சளி, இருமல் தாண்டி பூண்டு பல்வேறு நன்மைகளையும் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூண்டு பால் எடுத்துகொள்ளும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்

கல்லீரல் கோளாறுகள், குடல் பிரச்சினை இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள், ஒற்றைத்தலைவலி பிரச்சினை கொண்டிருப்பவர்கள், உடல் உஷ்ணம் அதிகமாக கொண்டிருப்பவர்கள், நெஞ்செரிச்சல் இருப்பவர்கள், வாய் துர்நாற்றம் பிரச்சினையை கொண்டிருப்பவர்கள் அதிகமாக பூண்டை எடுத்துக்கொள்வதன் மூலம் பிரச்சினை ஏற்படுகிறது. இவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் பூண்டு பால் சேர்க்கலாம்.

அதிகப்படியான பூண்டு சேர்ப்பது நன்மை இல்லை. ஆரோக்கியமான நன்மைகளை அள்ளித்தரும் மருத்துவ குணமிக்க பொருள்களையும் அளவாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அவை வேறு ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்கிவிடலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment