நிலக்கரி மாயம்: அமைச்சர் செந்தில்பாலாஜி

Date:

கடந்த காலம்போல் இல்லாமல், வெளிப்படையான நிர்வாகத்தை தருவதே தமிழக அரசின் நோக்கம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் நிலக்கரியை காணவில்லை. பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பு உள்ளதற்கும் வித்தியாசம் மட்டும் 2.38 லட்சம் டன்.

நிலக்கரி காணாமல்போன விவகாரத்தில் தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனல்மின் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய ஆய்வு நடத்தப்படும்.

இந்தாண்டு மின்கட்டணத்தில் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படவில்லை.

குறைபாடுகள் உள்ள 8,900 மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலம்போல் இல்லாமல், வெளிப்படையான நிர்வாகத்தை தருவதே தமிழக அரசின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...

அம்பாறையில் ஒருவர் சுட்டுப்பிடிப்பு

காவல்துறை காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர், நேற்று...

டித்வா அனர்த்தத்தில் மண்ணுக்குள் புதைந்த முச்சக்கர வண்டி 171 நாட்களின் பின் மீட்பு

டித்வா புயலால் உவபரநாகமவில் உள்ள மஸ்பன்ன என்ற சிறிய ஊருக்கு அருகே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்