போதைப்பொருள் வலையமைப்பிற்கு சொந்தமான சொகுசு பேருந்து, 5 கைத்துப்பாக்கிகள் மீட்பு!

Date:

துபாயில் வசிக்கும், ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தகாவுக்கு சொந்தமான, கிட்டத்தட்ட 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொகுசு பேருந்தை, போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், இன்று (20) மாத்தறை மிட்டெனியவில் கைப்பற்றினர்.

மாத்தறையிலிருந்து கடுவெல செல்லும் அதிவேக நெடுஞ்சாலையில் இந்த சொகுசு பேருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, வெலிகம, வலான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (20) காலை ஐந்து கைத்துப்பாக்கி ஆயுதங்களை பொலிஸ் போதைப்பொருள் பணியகம் கண்டறிந்தது.

சம்பவ இடத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 5 கைத்துப்பாக்கிகள், ர மகசீன்கள் மற்றும் 10 ரவைகளை போலீசார் கண்டுபிடித்தனர்.

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பல துப்பாக்கிகள் பற்றிய தகவல்களை பொலிஸ் போதைப்பொருள் பணியகம் பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிகளும் பாகிஸ்தானிலிருந்து எடுத்து வரப்பட்டவையே. கிடைத்த தகவலின் படி, தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த துப்பாக்கிகளும் ‘ஹரக்கட்டா’வுக்கு சொந்தமானவை என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர் என்று போலீஸ் போதைப்பொருள் பணியகம் கூறுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்