மனதில் தன்னம்பிக்கை தரும் நாக முத்திரை

Date:

மனதில் தன்னம்பிக்கை, உற்சாகத்தை ஏற்படுத்தும் முத்திரை
நாக முத்திரை நல்ல நினைவாற்றல் கிடைக்கும், கோபம், வெறுப்பு, நாட்டமின்மை, ஹிஸ்டீரியா போல் செயல்படுவது, எதற்கெடுத்தாலும் பயம் கொள்வது போன்ற எதிர்மறை குணங்கள் நீங்கும்.

செய்முறை:

வலது கையின் மேல் இடது கையைக் குறுக்காக வைத்து கட்டை விரலை ஒன்றின் மீது ஒன்றாக வைக்கவும். மார்பு பகுதிக்கு நேராக வருமாறு வைத்துக்கொள்ளவும்.
தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது சேரில் அமர்ந்து கொண்டோ இந்த முத்திரையை செய்யலாம். நேரம் கிடைக்கும் போது எல்லாம் இந்த முத்திரையை செய்யலாம்.

பயன்கள்:

நல்ல நினைவாற்றல் கிடைக்கும். கோபம், வெறுப்பு, நாட்டமின்மை, ஹிஸ்டீரியா போல் செயல்படுவது, எதற்கெடுத்தாலும் பயம் கொள்வது போன்ற எதிர்மறை குணங்கள் நீங்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் ஏற்படும். கற்பனைத் திறன் வளரும். தினமும் 10 முதல் 15 நிமிடம் பழகினால் போதும். மாற்றங்களை உடனடியாகக் காணலாம்.

spot_imgspot_img

More like this
Related

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...

உலக முட்டை தினம்: நாவிதன்வெளியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகள் வழங்கி வைப்பு

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்