25.7 C
Jaffna
January 2, 2025
Pagetamil
சினிமா

‘சிம்பு, பிரபுதேவா செய்ததை விக்னேஷ் சிவன் செய்யவில்லை’: காதலிற்கு காரணம் சொல்லும் நயன்தாரா!

நயன்தாரா இதுவரை சில நடிகர்களுடன் காதல் உறவில் இருந்துள்ளார். ஆனால், விக்னேஷ் சிவனுடனான காதலை மட்டும் சமீபத்திய பேட்டியில் புகழ்ந்துள்ளார் நயன்தாரா.

சினிமா துறையில் நடிக, நடிகையர்களிற்குள் காதல் வருவது சாதாரண விஷயம். அந்த வகையில் நயன்தாரா தன்னுடைய கரியரின் ஆரம்பத்தில் சிம்புவுடன் காதலில் இருந்தார்.

அது முறிந்த பின்னர், பிரபல நடிகையாக வலம் வரும்போது, பிரபுதேவாவை காதலித்தார். பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக சினிமாவை விட்டே சில வருடங்கள் விலகியிருந்தார். ஆனால் அந்த காதலும் முறிந்தது.

அதனை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவனை நீண்டகாலமாக காதலித்து வருகிறார். இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக தெரிவித்துள்ளார் நயன்தாரா. மேலும் விக்னேஷ் சிவனை நான் ஏன் இவ்வளவு காதலிக்கிறேன்  என்பதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

நயன்தாரா கூறுகையில், இதுவரை நான் பார்த்த ஆண்கள் பெரும்பாலும் பெண்களின் வளர்ச்சியை தடுக்கும் சக்தியாகவே இருந்துள்ளனர், குடும்பத் தலைவியாக இருந்தால் மட்டுமே போதும் என நினைக்கிறார்கள். ஆனால் விக்னேஷ் சிவன் மட்டும்தான் பெண்கள் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடியும், அதேநேரம் வேலையிலும் சாதிக்க முடியும் என்பதை எனக்கு புரிய வைத்தார் என்றும், அவருடைய இந்தப் புரிதல்தான் அவர் மீதான காதலை எனக்கு அதிகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.

நயன்தாரா கூறியதை வைத்து பார்க்கையில், சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகிய இருவருமே திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என கட்டளை போட்டிருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

Leave a Comment