தமிழ் திரையுலகில் இருக்கும் பட்டியலினத்தவரை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
போலீசாரை பார்த்ததும் மீரா மிதுன் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்து வீடியோ எடுத்து வெளியிட்டார். மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றபோதும் கூச்சலிட்டார்.
போலீசார் என் கையை உடைக்கப் பார்த்தாங்க, சாப்பாடே தரல, கொடுமைப்படுத்துறாங்க என கத்திக் கொண்டே சென்றார். விசாரணை நடந்த தளத்தில் மீரா மிதுன் கத்திக் கொண்டே இருந்த சத்தம் கேட்டது.
அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. முன்னதாக கேரளாவில் இருந்து வந்தபோதும் வழி நெடுகிலும் போலீசாரை மோசமாக திட்டினாராம்.
தொடர்ந்து மாற்றி, மாற்றி பேசுவதும், கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதும் விசாரணையில் இருந்து தப்பிக்க மீரா மிதுன் போட்டிருக்கும் திட்டமோ என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மனநல மருத்துவரை வைத்து மீரா மிதுனை பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்திருக்கிறார்களாம்.சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மீரா மிதுனை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். ஆகஸ்ட் 27ம் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் இருப்பார்.