அமைச்சரவை உபகுழு- ஆசிரிய தொழிற்சங்க சந்திப்பு இன்று இல்லை!

Date:

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்களிற்கும், சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க நியமிக்கப்பட்டஅமைச்சரவை உபகுழுவுக்கும் இடையே இன்று திட்டமிடப்பட்ட கலந்துரையாடல் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்கஇது தொடர்பில் தெரிவிக்கையில், வாராந்திர அமைச்சர்கள் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதால், விவாதம் மாற்றியமைக்கப்பட்டது என்றார்.

துணைக்குழு நியமிக்கப்பட்டு எட்டு நாட்கள் கடந்துவிட்ட போதிலும், தங்கள் கவலைகளை எழுப்ப அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறினார்.

இந்த குழு பிரச்சினையை தீர்க்காமல், தந்திரோபாயமாக தொழிற்சங்கங்களை தனித்தனியாக சந்தித்து நேரத்தை கடத்த முயற்சிக்கிறது என்றார்.

அமைச்சரவை உபகுழு இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்