வவுனியாவில் மேலும் 3 கொரோனா மரணங்கள்!

Date:

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மேலும் மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூவரே சிகிச்சை பலனின்றி நேற்று (16) மரணமடைந்துள்ளனர்.

வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரும், வவுனியா, புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 93 வயதுடைய ஆண் ஒருவரும், வவுனியா, பிரமனாலங்குளம் பகுதியைச் சேர்ந்த 90 வயது பெண் ஒருவரும் என மூவர் இவ்வாறு மரணமடைந்தவர்களாவர். மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார முறைப்படி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த இரு தினங்களில் வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக 5 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்