27.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
மருத்துவம்

சூடான பாலில் புரோட்டீன் பவுடரை கலந்து குடிக்கலாமா?

புரோட்டீன் பவுடரை சூடான பாலில் கலந்து குடிக்கலாமா?

உடற்பயிற்சி மேற்கொள்ளும் பலரும் புரதச் சத்துக்காக புரோட்டீன் பவுடரை உண்கின்றனர். ஆனால் அதை சூடான பாலில் கலப்பது தீமையை உண்டாக்கும் எனப்படும். அது உண்மையா? அதனால் என்ன கேடு ஏற்படுகிறது என விரிவாக பார்ப்போம்.

உடலில் தசைகளை உருவாக்க புரதம் உதவுகிறது. உடலுக்கு தேவையான ஒரு முக்கிய சத்தாக புரதம் உள்ளது. தினசரி சரியான அளவில் புரோட்டீன் எடுத்துக்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கிறது. ஆனால் பலரால் தினசரி தேவையான அளவு புரதச் சத்துக்களை எடுத்து கொள்ள முடிவதில்லை. அவர்கள் புரதத்தை பவுடராக எடுத்துக்கொள்கின்றனர். இதற்கென புரோட்டீன் பவுடர்கள் கடைகளில் கிடைக்கின்றன. மக்களின் எதிர்பார்ப்பு காரணமாக தற்சமயம் புரோட்டீன் பவுடர் அதிகமாக விற்பனையாகிறது.

புரோட்டீன் பவுடர்

தசைகளை உருவாக்கும் ஆற்றல் காரணமாக உடற்பயிற்சி மேற்கொள்பவர்களும் அதிகமாக புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்கின்றனர். இது 300 ரூபாயில் துவங்கி 1500 ரூபாய் வரை பல விலைகளில் கிடைக்கிறது. ஆனாலும் மக்கள் இதை வாங்க காரணம் என்னவெனில் புரதம் நமது உடலின் கட்டுமான அமைப்பிற்கு உதவுகிறது.

புரத உணவுகள்

மேலும் புரதம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க எலும்புகளை வலுப்படுத்தவும் மேலும் தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. தினசரி 45 முதல் 50 கிராம் வரை புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முட்டை, கீரைகள், கோழி இவற்றில் புரதங்கள் அதிகமாக காணப்படுகின்றன என்றாலும் புரோட்டீன் பவுடரும் உடலுக்கு நன்மை பயக்க கூடியதே. சாதரணமாக புரோட்டீன் பவுடரை குளிர்ந்த பாலில் கலந்து குடிக்கின்றனர். பலர் இதை சூடான பாலில் கலக்க கூடாது என்கின்றனர். அது ஏன் என இப்போது பார்க்கலாம்.

சூடான பாலில் புரோட்டீன் பவுடரை கலக்கலாமா?

புரோட்டீன் பவுடர் பல வகைகளில் நமக்கு கிடைக்கிறது. ஆனால் அதை சூடான பாலில் கலக்க வேண்டும் புரோட்டீன் தயிர் மற்றும் சோயாவில் இருந்து பெறப்பட்டு பவுடராக்கப்படுகிறது. இந்த தயிரில் இருந்து பெறப்படும் புரதமானது பாலை மூலம் பெறப்படுகிறது. சீஸ் செய்யும்போது அதிலிருந்து பிரியும் தயிரில் இருந்து இது செய்யப்படுகிறது. இதில் புரத உள்ளடக்கம் மற்றும் லாக்டோஸ் அதிகமாக உள்ளது. இந்த காரணத்தால் புரோட்டீன் பவுடர்கள் சிலருக்கு ஜீரணமாக நேரம் எடுக்கலாம்.

சூடான பாலில் சேர்க்கலாம். ஆனால் வெது வெதுப்பான பாலில் மட்டுமே புரதத்தை சேர்க்கலாம். கொதிக்க கொதிக்க இருக்கும் பாலில் சேர்க்கக்கூடாது. ஏனெனில் இது இந்த பவுடரை உடைத்து அதன் புரத நிலையை குலைத்துவிடும். மேலும் தயிரில் இருந்து எடுக்கப்பட்ட புரோடதீன் பவுடரை பாலை சேர்ப்பதில் சில நன்மைகளும் உள்ளன. இதில் இருக்கும் கொழுப்பு காரணமாக மெதுவாக செரிமானமடைகிறது. இதனால் நீண்ட நேரத்திற்கு பசி எடுப்பதில்லை.

சோயா புரதம்

சோயா அடிப்படையிலான புரதமானது சோயா பாலை கொண்டு வருகிறது. சோயா புரோட்டீன் பவுடரில் சூடான பாலை கலப்பது நன்மை புரிகிறது. இது ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க உதவுகிறது. சோயா புரோட்டீன் பவுடரை விடவும் மோர் புரோட்டீன் பவுடர் குறைவான அளவில் புரதத்தை கொண்டுள்ளது.

புரோட்டீன் பவுடர் குறிப்புகள்

மோர் அல்லது சோயா எந்த அடிப்படையிலான புரதமாக இருந்தாலும் சூடான பாலுடன் அதை கலந்து உட்கொள்ளும் நேரம் மிக முக்கியமானது. ஏனெனில் நீங்கள் பால் சேர்ப்பதால் உங்கள் தசைகளுக்கு செல்லும் புரதங்களின் அளவானது குறைகிறது. காலையில் புரத பொடியுடன் பாலை சேர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும். உடற்பயிற்சிக்கு பிறகு தண்ணீரில் புரோட்டீன் பவுடரை கலந்து குடிக்கலாம்.

உங்கள் தினசரி உணவில் புரோட்டீன் பவுடரை சேர்ப்பது ஆரோக்கியமான விஷயமாகும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க தசை கட்டமைப்பை ஊக்குவிக்கவும் மேலும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலே குறிப்பிட்ட விதிமுறைகளின்படி புரோட்டீன் பவுடரை பாலில் சேர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment