நாளை ஆரம்பிக்கும் இந்தியா, இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி.

Date:

இந்தியா, இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை தொடங்குகிறது.

இந்தியா, இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, ஆகஸ்ட் 4 முதல் 8 வரை நடந்து முடிந்தது. கடைசி நாளில் இந்திய அணி, 157 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது, ​​மழை குறுக்கீடு காரணமாகப் போட்டி டிரா ஆனது. இந்திய அணியின் கையில் 9 விக்கெட்டுகள் இருந்தன. இதனால், மழை இல்லாமல் இருந்திருந்தால் இந்தியாதான் வெற்றிபெற்றதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

முதல் போட்டியில் தோல்வியிலிருந்து தப்பித்த இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்த அணி முதல் டெஸ்டில் ஸ்பின்னர் இல்லாமல்தான் விளையாடியது. தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தில் சுழல் எடுபடும் என தகவல் வெளியாகியுள்ளது, அதிரடி ஆல்-ரவுண்டர் மொயின் அலியை அணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர் இரண்டாவது போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்புள்ள கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

மொயின் சேர்க்கப்படுவதால், மற்றொரு ஆல்-ரவுண்டர் சாம் கரன் வெளியேற்றப்படுவார் என கருதப்படும் நிலையில் ஜாக் கிரௌலி நீக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், இங்கிலாந்து அணி மொயன் அலி, சாம் கரன், ஒல்லி ராபின்சன் ஆகிய மூன்று ஆல்-ரவுண்டர்களுடன் களமிறங்குவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

இங்கிலாந்து உத்தேச XI அணி: ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், மொயின் அலி, ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜெம்ஸ் ஆண்டர்சன்.

spot_imgspot_img

More like this
Related

இடம்மாறி படுத்த முதியவருக்கு நேர்ந்த விபரீதம்!

அஹுங்கல்லவின் கல்வெஹெர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 74 வயது...

ஞானசாரருக்கு சிக்னல் கிடைக்கவில்லையாம்!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்