யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் இனால் வீதிகள் புனரமைப்பு

Date:

2021ஆம் ஆண்டுக்கான யாழ்.மாநகரசபையின் வட்டாரங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வீதிகளைப்புனரமைக்கும் செயற்பாடுகளை யாழ்.மாநகரசபை ஆரம்பித்துள்ளது.

யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு வட்டாரத்தின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் ப.தர்சானந் இனது சிபார்சின் கீழ் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்ட ரூ.01 மில்லியன் செலவில் 04 கையொழுங்கை வீதிகள் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளன.

பலாலி வீதி பீட்ஸா ஹட் ஒழுங்கை, சீனியர்லேன் கையொழுங்கை, சபாபதி வீதி கையொழுங்கை, நாச்சிமார் வீதி கையொழுங்கை என்பனவே யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் இனது சிபார்சின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக இடம்பெற்ற மேற்படி வீதிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வட்டார உற்ப்பினருடன் முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட், மற்றும் இந்நாள் யாழ்.மாநகரசபை பிரதி முதல்வர் து.ஈசன், மாநகரசபை உறுப்பினர்களான திருமதி.மதிவதனி விவேகானந்தராசா, திருமதி நளினா பிரேம்லால் மற்றும் ஒழுங்கை வாழ்.பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்