மணிவண்ணன் தரப்பின் மேலும் 9 உள்ளூராட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமை நீக்கம்!

Date:

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 9 பேர், அவர்களின் உள்ளூராட்சி உறுப்புரிமையை இழப்பதாக தெரிவத்தாட்சி அலுவலர்களிடமிருந்து கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு யாழ் மாநகரசபை உறுப்பினர்களாக தெரிவான 6 பேரும், நல்லூர் பிரதேசசபையின் உறுப்பினர்கள் 3 பேருக்குமே இவ்வாறு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் நல்லூர் பிரதேசசபை தவிசாளர், மணிவண்ணன் தரப்பின் முக்கியஸ்தரான யாழ் மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களை கட்சியை விட்டு நீக்குவதாக தமிழ் காங்கிரஸ் கட்சியினால் தெர்தல்கள் திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களால் உறுப்புரிமையை இழக்கும் அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மணிவண்ணன் தரப்பை சேர்ந்த பலருக்கு இந்தவிதமான அறிவித்தல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அந்த முடிவிற்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தை நாடி, தற்காலிக தடையுத்தரவை பெற்றுக்கொண்டுள்ளனர்.

தற்போது உறுப்புரிமையை இழப்பதாக அறிவிக்கப்பட்டவர்களும் விரைவில் நீதிமன்றத்தை நாடுவார்கள் என தெரிகிறது.

spot_imgspot_img

More like this
Related

ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்...

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்