மேலும் 5 கொரோனா மரணங்கள்!

Date:

கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (04) அறிவித்துள்ளார்.

இதன்மூலம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 489 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணய்களின் விபரம்-

உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த, 53 வயதான பெண் ஒருவர், மாவனல்லை வைத்தியசாலையிலிருந்து கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு மற்றும் கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவ பீட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (04) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை மற்றும் அவையவங்கள் செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 02ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், இருதய நோய் நிலை, கொவிட்-19 நிமோனியா நிலை மற்றும் உக்கிர சிறுநீரக சிதைவடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த, 62 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த திங்கட்கிழமை (01) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று நிலை மற்றும் சுவாசத் தொகுதி செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான பெண் ஒருவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (03) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு அதிர்ச்சி, கொவிட்-19 நிமோனியா நிலை உக்கிர சிறுநீரக சிதைவடைவு மற்றும் புற்றுநோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப்

ஈரான் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தோஹாவில் நடைபெறும் என்றும், இதில்...

வடக்கு ஆளுனரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

அதிகார பரவலாக்கல் அரசியல் தத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட வடக்கு ஆளுனரால், வவுனியா...

காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி

மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்