கிரானில் காட்டு யானை தாக்குதலில் ஒருவர் பலி!

Date:

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கல்கேணி எனும் வயற்பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் பலியானதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 6 ஆறு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பொட்டுக்குளம் வாகனேரி கிராமத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான சின்னதம்பி வேலுப்பிள்ளை (59) என்பவரே பலியாகியுள்ளார்.

இவர் வழமைபோன்று வயல் வேலைகளை முடித்துவிட்டு தமது இருப்பிடம் நோக்கி துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் காட்டுக்குள் இருந்து பிரவேசித்த யானையொன்று இவரைத் தாக்கியுள்ளது.

ஸ்தலத்திலேயே பலியான அவரது சடலத்தை ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையிலான வாழைச்சேனை போலீசார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மக்களின் உதவியுடன் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம்பற்றி வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குறித்த பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் இவ் யானைகளை கட்டுப்படுத்துவதற்கான யானை வேலிகள் அமைக்க வேண்டும் என விவசாயிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்