பல பெண்களுடன் உல்லாசம்: லுங்கி டான்ஸ் பாடகர் மீது மனைவி முறைப்பாடு!

Date:

பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக பாலிவுட் ராப் பாடகர் யோ யோ ஹானி சிங் மீது அவரது மனைவி ஷாலினி தல்வார் குற்றம் சாட்டியுள்ளார்.

லுங்கி டான்ஸ் என்ற பிரபல பாடலை பாடி ஹானி சிங் பிரபலமானவர். அவரது மனைவி ஷாலினி தல்வார் கணவர் ஹானி சிங் மீது புகார் அளித்துள்ளார். டெல்லி நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விவரித்து 120 பக்க மனுவை, அவர் மனைவி தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மனுவில் அவரது கணவர் ஹானி சிங் தம்மை உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தியது, 2011 இல் திருமணத்திற்குப் பிறகு மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டது, கடுமையாக நடத்தப்பட்டது. மேலும் ஏன் இப்படி நடந்து கொள்கிறேன் என்று கேட்டதற்கு, தன் விருப்பத்திற்கு மாறாக தான், உன்னை திருமணம் செய்து கொண்டேன், என்று மனைவியிடம் கூறிய பாடகர் யோ யோ ஹானி சிங்.

மொரீஷியசுக்கு பிறகு ஹானி சிங் தனது சுற்றுப்பயணங்களில் தன்னை அழைத்துச் செல்ல மறுத்து, ‘பல பெண்களுடன் அடிக்கடி தகாத கொள்ளத் தொடங்கினார்’ என்றும் தான் திருமணமானவர் மறைத்து வந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஒரு சமயம், திருமணத்தின் படங்கள் ஆன்லைனில் கசிந்த போது, ​​தன்னை ‘இரக்கமின்றி அடித்ததாகவும்’, தான்தான் திருமண புகைப்படத்தை ஆன்லைனில் அப்லோட் செய்தேன் என்று சந்தேகப்பட்டு துன்புறுத்தியதாகவும் கூறினார்.

மேலும், பிரவுன் ரங் மியூசிக் வீடியோவில் அவருடன் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு கொண்ட ஷாலினி குற்றம் சாாட்டினார். அந்த மனுவில், ‘கர்வா சவுத்’ அன்று அவருக்காக சாப்பிடாமல் விரதம் இருந்தபோது, ​​அவர் அந்த பெண்ணுடன் துபாயில் உல்லாசமாக இருந்ததால் குற்றம் சாட்டினார் ஷாலினி.

மேலும் “துபாயில் இருந்து அவர் திரும்பியவுடன், ஒரு பெண்ணுடன் இருந்த அந்தரங்க புகைப்படங்களை தான் காண நேரிட்டது

இதை தொடர்ந்து, தலைமை மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்டிரேட் தனியா சிங், ஹனி சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும், டெல்லியில் தான் தனியே வசதியுள்ள வீட்டில் வாழவும், அவருடைய விதவை தாயை சார்ந்து இருக்க முடியாத காரணத்தினாலும், அவருக்கு ஒவ்வொரு மாதமும் 5 லட்சம் வாடகை வழங்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார் யோ ஹானி சிங் மனைவி ஷாலினி தல்வார். இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்