மீண்டுமோர் இழப்பை சந்தித்த யாஷிகா!

Date:

தோழியை இழந்த யாஷிகாவுக்கு மேலும் ஒரு பெரும் இழப்பு

அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த பவானி தன் தோழி யாஷிகாவை பார்க்க சென்னைக்கு வந்தார். பவானியை அழைத்துக் கொண்டு காரில் சென்றார் யாஷிகா. கடந்த 24 ம் தேதி இரவு கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது தடுப்புச்சுவரில் மோதி அந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் பவானி இறந்துவிட்டார். படுகாயம் அடைந்த யாஷிகாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சமீபத்தில் தன் உடல்நிலை பற்றி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார் யாஷிகா. அதில் அவர் கூறியதாவது,

இடுப்பு எலும்பில் பல இடங்களில் முறிவு ஏற்பட்டது மற்றும் வலது கால் எலும்பும் முறிந்துவிட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த 5 மாதங்களுக்கு என்னால் எழுந்து நடக்கவோ, நிற்கவோ முடியாது. நான் நாள் முழுக்க படுத்த படுக்கையாக இருக்கிறேன். படுக்கையில் தான் மோஷன் போகிறேன். இடது பக்கமோ, வலது பக்கமே திரும்ப முடியவில்லை. முதுகிலும் காயம். அதிர்ஷ்டவசமாக என் முகத்திற்கு எதுவும் ஆகவில்லை. இது எனக்கு மறுபிறப்பு தான் என்றார்.

யாஷிகாவல் தற்போதைக்கு நடக்க முடியாது என்பதால் அவரால் படங்களில் நடிக்க முடியாது. இதனால் அவரை ஒப்பந்தம் செய்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் யாஷிகாவுக்கு பதில் வேறு நடிகைகளை நடிக்க வைக்க முடிவு செய்துவிட்டனர். இதனால் யாஷிகா கை வசம் இருக்கும் பட வாய்ப்புகள் அனைத்தும் கை நழுவிவிட்டது.

இது குறித்து ரசிகர்கள் கூறியிருப்பதாவது, பட வாய்ப்புகள் போனால் போகட்டும். உடல்நலம் தான் முக்கியம். நீங்கள் முதலில் குணமாகி எழுந்து நடங்க. அதன் பிறகு பட வாய்ப்புகள் வந்து குவியும். கெரியரை பற்றி தயவு செய்து கவலைப்பட வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்