பொதுச்சுகாதார பரிசோதகரின் முகத்தில் துப்பியவர் கைது!

Date:

கிரிவுல, புஸ்கொலதெனிய பகுதியில் கொரோனா தொற்றாளரின் வீட்டுக்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர் மீது, தொற்றாளரின் தந்தை எச்சில் துப்பியுள்ளார்.

சம்பவத்தின் போது சந்தேக நபர் மது போதையில் இருந்ததுள்ளார்.

அந்த வீட்டில் கொரோனா நோயாளி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொதுச்சுகாதார பரிசோதகர் அங்கு சென்றார். இதன்போது, சுகாதார பரிசோதகரை தாக்க முயன்ற கொரோனா தொற்றாளரின் தந்தை, அவரது முகத்தில் எச்சில் துப்பினார்.

48 வயதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி அதுரகம, பண்டாரகமவில் இதே போன்ற ஒரு சம்பவம் பதிவாகியது. அதில் தொடர்புடையவருக்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்