அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும் தமிழரசின் திட்டத்துக்காக திருட்டு கூட்டணி அமைப்பு –ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன்

Date:

தமிழ் மக்களின் பூர்வீகமான அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் தமிழரசு கட்சியின் கொள்கையான முஸ்லிம்களுக்கு சுயாட்சி திட்டத்துக்காக  இந்த 6 கட்சிகள் கொண்ட திருட்டுக் கூட்டணி அமைக்கப்பட்டள்ளது எனவே இந்த சுயாட்சி திட்டத்தை செயல்படுத்த சம்பந்தன் தலைவர் பிரபாகரனை முடித்துவிடச் சொன்னாரா?  என்ற சந்தேகம் எழுந்துள்ளது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்தார்.

ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இன்று வியாழக்கிழமை (16) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த தமிழரசு கட்சியின் யாப்பின் அடிப்படையில் முதலாவது விதியில் தமிழர்களுக்கான  சுயாட்சி அமைத்து கொடுக்க வேண்டும் அதேபோல் முஸ்லிம்களுக்கு சுயாட்சி அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே நோக்கம்.

எனவே இதனடிப்படையில் இந்த தமிழரசு கட்சி எம்.சுமந்திரன். இரா சாணக்கியன் செயற்படுவார்கள் ஆகவே இந்த யாப்பை தேசிய தலைவர் பிரபாகரன் பார்க்கவில்லையா? அல்லது அன்ரன் பாலசிங்கம் பார்க்கவில்லையா? அது ஒரு கேள்வியாக உள்ளது

அதேவேளை  தனித் தமிழ் ஈழம் என்ற இலக்கு எத்தனை ஆயிரம் மக்களை இழந்துள்ளோம் எத்தனை ஆயிரம் போராளிகளை  வீரச்சாவடைந்த உள்ளார் அத்துடன் சகோதரப் படுகொலைகள் நடந்தேறியுள்ளன இத்தனைக்கும் காரணம் தனித் தமிழ் ஈழத்துக்காக நாங்கள் போரடிக் கொண்டிருக்கும் போது இந்த தமிழரசு கட்சி இத்தனை வருடமாக முஸ்லிம்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என செயல்பட்டுள்ளனர்.

அதனால்தான் என்னவோ தெரியவில்லை சம்பந்தன் தலைவர் பிரபாகரனை முடித்து விட சொன்னதாக சொன்னார்கள் எனவே இது தான் காரணமா? சுயாட்சியை முஸ்லிம்களுக்கு கொடுக்க வேண்டும் என சொன்னால் வந்தேறு குடிகள் முஸ்லிம்களுக்கு எப்படி வடக்கு கிழக்கில் சுயாட்சியை கொடுக்க முடியும்.

கடந்த மைத்திரி ஆட்சியின் போது முஸ்லிம் ஒருவரை  கிழக்கு மாகாண முதலமைச்சராக கொண்டு வந்தார்கள். எனவே எங்கள் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் அம்பாறை மாவட்டத்தை தாரை வைப்பதற்கான உரிமையை யார் தந்தது? நீங்கள் யார்?

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள்  50 மேற்பட்ட தமிழ் கிராமங்களில் உள்ள  தமிழ் மக்களை  அடித்து விரட்டப்பட்டு ஆக்கிரமித்துள்ளனர். இவ்வாறு அம்பாறையில் தமிழ் மக்களின் கிராமங்கள் பறிபோனதை எதிர்த்து ஏன் தமிழரசு கட்சி குரல் கொடுக்கவில்லை அதற்கு எதிராக ஏதாவது போராட்டம் செய்தார்களா? இல்லை

இவைகள் அனைத்தும் தெரிந்துதானே எல்லோரும் இயங்கி கொண்டிருக் கின்றீர்கள் காலம் காலமாக கிழக்கு மாகாண தமிழர்களை ஏன் ஏமாற்றி வருகின்றீர்கள். இந்த மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நல்லாட்சி காலத்தில் தீர்வு காணப்பட வேண்டியது அதற்கான தீர்வுகளை தமிழரசு கட்சி ஏன்  எட்டிக் கொள்ளவில்லை?

எனவே தமிழர்களின் போராட்டத்தை கடந்த காலத்தில் எதிர்த்த முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்த இந்த 6 கட்சிகளை கொண்ட திருட்டு கூட்டணி வெற்றி பெறாது என்பதுடன் கிழக்கு மாகாணத்தில் பாரிய ஒரு போராட்டத்தை; நாங்கள் நடாத்துவதற்கு ஆயத்தமாக இருக்கிறோம்

எனவே இவர்களுக்கு அரசியல் செய்வதற்கு ஒன்றும் இல்லை அதனால் தான் திருட்டு கூட்டணி அமைந்து தமிழ் மக்களை ஏமாற்றும் பெரிய ஒரு துரோகச் செயல் ஈடுபட்டுள்ளனர் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டு செயற்படவும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

spot_imgspot_img

More like this
Related

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக,...

அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஹெரோயினுடன் சிக்கிய 7 போதைப்பொருள் வியாபாரிகள்

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்