வலிமை பட முதல் பாடலை டிரெண்டாக்கி வருகின்ற அஜித் ரசிகர்கள்!

Date:

வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி கடந்த மாதம் வெளியானது. நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார். இதற்கிடையே, இன்று இரவு வலிமை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, வலிமை படத்தின் முதல் பாடலான, ‘நாங்க வேற மாரி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

அஜித் ரசிகர்கள் இந்த பாடலை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 4 பிள்ளைகளின்...

வீடொன்றில் நள்ளிரவில் தீப்பரவல்: மோட்டார் சைக்கிளும் சேதம்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பளவெளிப் பகுதியில் அமைந்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்