26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
சினிமா

கணவரின் ஆபாசப் பட வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி கூறிய கருத்து!

வேண்டுகோள் விடுக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி!

ஆபாசப் படம் தயாரித்ததாக ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுக்கப்பட்டது, ஹாட்ஷாட்ஸ் என்ற செயலியில் அதைப் பதிவேற்றம் செய்து எழுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யபட்ட ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்திரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பலரும் இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து கூறி வருகிறார்.

இது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ” ஆம். கடந்த சில நாட்கள் எல்லாப் பக்கமும் சவால் மிகுந்ததாக இருந்தது. பல்வேறு வதந்திகளும், குற்றச்சாட்டுகளும் வலம் வந்தன. ஊடகங்களாலும், நலம் விரும்பிகளாலும் ஆதாரமற்ற தாக்குதல்கள் என் மீது தொடுக்கப்பட்டன. பல்வேறு கேலிகளும், கேள்விகளும் பதிவிடப்பட்டன. என் மீது மட்டுமின்றி, என் குடும்பத்தினர் மீதும். ஆனால், அவை எது குறித்தும் இன்னும் நான் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை எதுவும் நான் கூறப்போவதில்லை. எனவே, என் மீது தவறான பழி சுமத்துவதை நிறுத்துங்கள். மீண்டும் சொல்கிறேன். ஒரு நடிகையாக என்னுடைய கொள்கை ‘புகார் சொல்லக் கூடாது; விளக்கம் சொல்லக் கூடாது ’என்பதே. நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மும்பை போலீஸ் மற்றும் இந்திய நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு குடும்பமாக, எங்களால் இயன்ற அனைத்து சட்டப்பூர்வமான வழிகளையும் முயன்று கொண்டிருக்கிறோம்.

ஆனால், ஒரு தாயாக நான் உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்வது ஒன்றுதான், ‘எங்களுடைய குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுங்கள். ஒரு விஷயத்தின் உண்மைத் தன்மையை ஆராயாமல் அதுகுறித்து கருத்து கூறாதீர்கள்.
நான் சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமக்கள் மற்றும் கடந்த 29 வயது கடினமாக உழைக்கும் ஒரு பெண். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நான் அவர்களுடைய நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன். மிக முக்கியமான இந்தத் தருணத்தில் என்னுடைய மற்றும் என் குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கமாறு பணி மூலம் உங்களைக் கேட்கிறேன். ஊடக சர்ச்சைக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை. சட்டம் அதன் கடமையைச் செய்ய விடுங்கள் ”. இவ்வாறு அந்த நீண்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment