ஹிஷாலினியின் சடலம் இன்று தோண்டியெடுக்கப்படுகிறது!

Date:

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின்வீட்டில் பணிபுரிந்த போது தீயில் எரிந்து உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சடலம் இன்று (30) மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ளது.

இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக சடலம் கடுமையான பொலிஸ் பாதுகாப்பில் பெரதெனியா போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நுவரெலியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி லுஷாகா குமாரி தர்மகீர்த்தி நேற்று (29) பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தை மீண்டும் தோண்டியெடுக்கவும், மற்றொரு பிரேத பரிசோதனை நடத்தவும் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக அரச சட்டத்தரணி ஹான்ஸ் அபேரத்ன நேற்று (29) நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தார்.

வழக்கை பரிசீலித்த பின்னர், நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி லுஷாகா குமாரி தர்மகீர்த்தி, சிறுமியின் உடலை தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு ஏற்ப இன்று (30) காலை 8.30 மணிக்கு சிறப்பு மருத்துவ குழு முன் அகழ்வு இடம்பெறும்.

ஹிஷாலியின் சடலம் புதைக்கப்பட்டுள்ள டயக மேற்குப் பகுதியில் உள்ள  பொது மயானத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவிற்கு ஆடு கடத்தியவர்கள் சிக்கினர்

இலங்கை கடற்படையினர் நேற்று (09) புத்தளம், உச்சமுனைக்கு அப்பால் உள்ள கடல்...

தட்டம்மை பரவல்: 3 சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவில்லை!

தட்டம்மை நோய் பரவல் காரணமாக, மூன்று சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இன்று...

பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க முறையான தகுதியுடைய ஆசிரியரல்ல: புதிய குற்றச்சாட்டு!

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பல்கலைக்கழகம், தேசிய கல்விக்கல்லூரி அல்லது ஆசிரியர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்