இலங்கையில் நேற்று முன்தினம் 66 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை பதிவான மரணங்களன் எண்ணிக்கை 4,324 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மாதத்தில் பதிவாக அதிகபட்ச தினசரி கொரோனா மரணம் இதுவாகும்.
இதற்கிடையில், கடந்த சில வாரங்களில் சுமார் 1,300 ஆக இருந்த தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை இப்போது 2,000 ஐ கடந்துவிட்டது.
நேற்று 2,370 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். தற்போது, 26,445 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த 45 நாட்களில் பதிவான அதிக பட்ச நாளாந்த தொற்றாளர்கள் நேற்று பதிவாகினர்.




