எந்த நேரத்திலும் உள்ளூராட்சி தேர்தலை நடத்த நாம் தயார்: தேர்தல்கள் ஆணைக்குழு!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எந்த நேரத்திலும் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படுமானால், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொற்றுநோய் நிலைமையைக் கருத்தில் கொண்டு திகதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றார்.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை ஓராண்டு வரை நீட்டிக்கும் அதிகாரம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு உண்டு. அதை தடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை.

2022  பெப்ரவரி 1 முதல் வாக்காளர்கள் பதிவு செய்யப்படுவார்கள் என்பதால், இடைக்காலத்தில் ஒரு துணை வாக்காளர் பதிவேடு தயாரிக்கப்படும். இதன் மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் அபாயம் இல்லை என்றார்.

18 வயது நிரம்பிய நபர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் அல்லது உதவி தேர்தல் அலுவலரிடம் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

துணை வாக்காளர் பதிவேடு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சான்றளிக்கப்படும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால்...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்