கிளிநொச்சி தனியார்துறையினர் இ.போ.ச மீது கடும் குற்றச்சாட்டு!

Date:

இலங்கை போக்குவரத்து சபை தங்களிற்கு எந்த இடத்தில் வருமானம் வருகின்றதோ அந்த இடத்தில் மாத்திரம்தான் சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர் நாங்கள் கஸ்ட பிரதேசங்களிற்கும் சேவையில் ஈடுபடுத்துகின்றோம் என கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் நா.நகுலராஜா தெரிவித்தள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மெலும் தெரிவிக்கையில்,

கடந்த வியாழக்கிழமை முதல் தனனியார் பேருந்து சேவையினருக்கும், அரச பேருந்து சேவையினருக்குமிடையில் முறைகேடான சேவை இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 20.10 மணிக்கு முட்கொம்பன் நோக்கி சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கடந்த வியாழக்கிழமை முதல் முட்கொம்பன் செல்லாது முழங்காவில் ஊடாக பூநகரிக்கான சேவையை செய்ய ஆரம்பித்தது.

நேர கணிப்பாளரிடம் கதைத்து சேவையை மேற்கொள்ளுமாறும் பலரும் வலியுறுத்தியிருந்தனர். அவ்வாறான சேவையை முன்னெடுப்பதற்கு தமக்கு மேல் இருக்கும் அதிகாரி குறிப்பிட்டுள்ளதாகவு்ம, அதற்கு அமைவாகவே சேவையைில் ஈடுபடுவதாகவும் அரச பெருந்து சாரதி தெரிவித்தள்ளார்.

தமது தனியார் பேருந்துகள் சேவையைில் ஈடுபடுகின்ற அதே நேர அட்டவணைிய்ல் அரச பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு தயாராக இருந்தது. அதனால் கடந்த இரண்டு நாட்களாக இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டது.

அவ்வாறான நிலையில் எமது சேவையை மேற்கொள்ளத வகையில் அரச பேருந்துகளை தனியார் பேருந்துகளிற்கு முன் நிறுத்தி சேவையை செய்ய விடாது இடையூறு விளைவித்தனர்.

இவ்விடயம் தெடார்பில் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் இடம்பெற்றது. இரு தரப்பினரும் குழப்பம் இல்லாத வகையில் சேவையில் ஈடுபடுமாறு பொலிசார் குறிப்பிட்டிருந்த போதிலும், இன்று காலை 8 மணியளவில் சேவையில் ஈடுபட தயாராக இருந்த பொழுது பழுதடைந்திருந்தமையால் அந்த வழியில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு மற்றுமொரு பேருந்தை தயார்படுத்தினர்.

குறித்த பேருந்தை சேவையில் ஈடுபட விடாது அரச பேருந்தை குறுக்கே விட்டு இடையூறு விளைவித்தனர். அதனால் குறித்த சேவை இடம்பெறாது பயணிகளும் பேருந்தில் இருந்தனர். தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பிலும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த சமயத்தில் அரச பேருந்து சேவையினர் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் அரச பேருந்து சாலை அதிகாரிகள் மற்றம் தனியார் போக்குவரத்து பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அடங்கலாக பேச்சுவார்த்தை மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது குறி்த அரச பேருந்து முட்கம்பன் ஊடாக பூநகரி செல்ல முடியும் எனவும், வேறு வழிகள் ஊடாக செல்ல முடியாது என்ற விடயத்தினையும் கிளிநொச்சி சாலையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு சேவை வழி மாற்றங்கள் இருப்பின் வடமாகாண போக்குவரத்து அதிகார சபையுடன் பேசி பின்னர் சேவையில் ஈடுபட முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் இரு சேவைகளும் வழமைபோல இடம்பெற ஆரம்பித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றம் வந்த சமயத்தில் அரச பேருந்து சேவைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறவில்லை. தனியார் பேருந்து சேவைகள் மாத்திரமே அனைத்து இடங்களிலும் இடம்பெற்று வந்தது.

தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்ட சேவையை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொள்ளவந்தபொழுது, முழு இடங்களிற்கும் அவர்களால் சேவை செய்ய முடியாது இருந்தமையால் குறித்த சேவைகளை தனியார் பேருந்துகள் மூலம் சேவைகள் இடம்பெற்றது.

இன்றும் இலங்கை போக்குவரத்து சபை தங்களிற்கு எந்த இடத்தில் வருமானம் வருகின்றதோ அந்த இடத்தில் மாத்திரம்தான் சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் நாங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுர்களிலிருந்து கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையம் வரைக்குமான சேவைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

நட்டமோ, இலாபமோ என்ற திட்டத்தின் ஊடாக சேவையை செய்வதற்கு எமது தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினால் சேவை மேற்கொள்ளப்படும் வகையில் பணித்துள்ளோம்.

தட்டுவன்கொட்டி, சாந்தபுரம், மலையாளபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து கட்டாயம் அந்த சேவையை மேற்கொள்ள வே்ணடும் என்பதற்காக அந்த சேவையை நாங்கள் செய்து வருகின்றோம். அரச பேருந்துகளின் ஊடாக மக்களிற்கு சேவைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றபுாதிலும் மக்களிற்கு சேவைகள் தேவைப்படும் பகுதிகளில் எந்த சேவைகளும் இடம்பெறவில்லை.

60க்கு 40 என்ற நேர அட்டவணையிடப்பட்டு அதை நிறைவேற்றுகின்ற சந்தர்ப்பத்தில் அதனை இலங்கை போக்குவரத்து சபை குழப்பியமையால் வடமாகாணம் முழுவதும் அதனை அமுல்ப்படுத்த முடியாது இருந்தது.

வடமாகாணம் முழுவதும் 60க்கு 40 என்ற நேர அட்டவணையிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதற்கு அமைவாக நாங்களும் சேவை செய்ய தயாராக இருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியுடன் காட்டுக்குகைக்குள் குடித்தனம் நடத்திய ரவிச்சந்திரனுக்கு பிணை!

உடதும்பர காவல் பிரிவுக்கு உட்பட்ட கரம்பகேதிய பகுதியில், மலை உச்சியில் உள்ள...

அமெரிக்க தடையை தவிர்க்க ‘கள்ளக்காதல்’ உத்தியை பயன்படுத்தியதா சீனா?

ஒரு சீனப் பெண் தொழிலதிபருடன் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கியுள்ள என்விடியா தலைமைச்...

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் கள்ளக்காதல் விவகாரம்: சிங்கப்பூர் நிறுவனத்தின் விளக்கம்!

என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங் குறித்த சர்ச்சை தீவிரமடைந்து வரும் நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்