ஆபாச படங்கள் தயாரித்து விற்பனை: ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது!

Date:

ஆபாச படங்களை தயாரித்த வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழில், மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா லண்டனைச் சேர்ந்தவர்.

இந்நிலையில், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை, ஆபாச படங்களை தயாரித்த வழக்கில், நேற்று இரவு மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இது குறித்து மும்பை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் ராஜ் குந்த்ரா, மும்பையில் ஆபாச படங்களைத் தயாரித்து, அவற்றை சில மொபைல் போன் ஆப்களில் பதிவேற்றம் செய்ததாகவும், அதற்கான அனைத்து ஆதாரங்களும் காவல் துறையிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ் குந்த்ராவுடன் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்