இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் வவுனியா பொருளாளர் என்ற வகையிலேயே தான் தடுப்பூசியை பெற்றதாக செஞ்சிலுவை சங்கத்தின் பொருளாளரும் வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி அதிபருமான தனபாலசிங்கம் தெரிவித்தார்.
வவுனியா சுகாதார பிரிவினரால் அதிபரொருவர் முறைக்கேடான முறையில் தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக வெளிவந்த செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தொண்டர்கள் வவுனியாவில் சில வைத்தியசாலைகளில் கொரோனா இடர்கால தொண்டர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் கொடுப்பனவுகள் தொடர்பில் நானும் தினமும் அவர்களை சந்திப்பதுடன், அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பார்வையிடும் பணியிலும் நான் ஈடுபடுகின்றேன்.
இந்த வகையில் தொண்டர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதையால் அவர்களின் தொடர்பில் உள்ளவன் என்றவகையில் அச்சம் காரணமாக நானும் அதை பெற்றிருந்தேன்.
எனினும் நான் அதிபர் என்ற வகையில் குறித்த தடுப்பூசியை பெறவில்லை எனவும் தெரிவித்தார்.




