நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 3,009 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
431 சந்தேக நபர்களும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 645 நபர்களும் பல்வேறு குற்றவியல் குற்றச்சாட்டுகளில் 98 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் போதைப்பொருள் வைத்திருந்த 1,250 நபர்களும், அனுமதியின்றி துப்பாக்கி வைந்திருந்த 05 நபர்களும், குடிபோதையில் வாகனம் செலுத்திய 580 நபர்பளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
14,927 பொலிஸ் அதிகாரிகளும் 52 பொலிஸ் மோப்ப நாய்களும் இந்த சிறப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1