இளம் யுவதியை ஏற்றிச் சென்ற இளைஞனிற்கு எமனாக குறுக்கே வந்தது எருமை மாடு!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் புளியங்குளம் பகுதியில் நேற்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் நின்ற எருமை மாட்டுடன் மோதுண்டு உயிரிழந்த இளைஞன் வவுனியா ஓமந்தை பகுதியை சேர்ந்தவர். அவரது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் யுவதி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு வீதியின் புளியங்குளம் பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு விபத்து நடந்தது.

முத்துஐயன் கட்டுப்பகுதியில் இருந்து கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் வேலை செய்யும் இளம் யுவதியினை கொக்குத்தொடுவாய் பகுதிக்கு உந்துருளியில் ஏற்றி சென்றபோது, வீதியில் நின்ற எருமை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்

இந்த விபத்தின் போது வவுனியா ஓமந்தையை சேர்ந்த கதிர்காமநாதன் நிலோஜன் (24) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் உந்துருளியில் பயணித்த யுவதி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழி விவகாரம்: ராஜ் சோமதேவவின் விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரும் அமெரிக்கத் தமிழர் அமைப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள...

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து நவம்பர் 10 திகதி வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்